Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த படத்தில் கிருஷ்ணராக நடிக்கும் பிரபாஸ்?

அடுத்த படத்தில் கிருஷ்ணராக நடிக்கும் பிரபாஸ்?
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:49 IST)
பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இதையடுத்து அவர்  கல்கி ஏடி 2898 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரபாஸ் அடுத்து விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா படத்தில் சிவன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை முகேஷ் சிங் இயக்குகிறார். நுபுர் சனோன் நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தில் மிரளவைக்கும் சிங்கிள் ஷாட் ஸ்டண்ட் காட்சி! தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!