Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 டிக்கெட்தான் விற்பனை… 4420 ரூபாய் வசூல்…. கங்கனாவின் ‘தாக்கட்’ திரைப்படம் படுதோல்வி!

Webdunia
சனி, 28 மே 2022 (15:54 IST)
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாக்கட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை. அதுபோலவே பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த தாக்கட் என்ற திரைப்படம் ரிலீஸானது. பல கோடி ரூபாய் முதலீட்டில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் ரிலீஸாகி 8 ஆவது நாளான இன்று வெறும் 20 டிக்கெட்கள் மற்றுமே விற்பனை ஆகியுள்ளதாகவும், இன்றைய வசூல் சுமார் 4420 ரூபாய்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கருத்துகளில் கங்கனா அனைவராலும் வெறுக்கப்பட்டாலும், அவரின் நடிப்புத்திறமைக்காக பரவலாக ரசிகர்களைப் பெற்றிருந்தார். ஆனால் அவரின் படம் ஒன்று இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்திருப்பது பரபரப்பாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments