Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கர்ணன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:15 IST)
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே. மாரியம்மாள் என்ற கிராம பாடகி இந்த பாடலை பாடியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ’கர்ணன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ’கர்ணன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த பாடலும் முதல் பாடல் போலவே வைரலாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ’கர்ணன்’ படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments