Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் டிரைலர் எப்போது?... வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (15:46 IST)
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஏற்கனவே கார்த்தியின் தேவ் படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments