என்னது வெப் சீரிஸாக வருகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்?

vinoth
செவ்வாய், 17 ஜூன் 2025 (13:52 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே,ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனாலும் இந்த படத்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதல் நாளில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம் அதன் பின்னர் வசூலில் அடிவாங்கியது. படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் இந்த படம் 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பின்னர் வசூல் படிப்படியாகக் குறைந்தது. தமிழ்நாட்டில் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது இந்த படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “ரெட்ரோ படத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை நான்கைந்து அத்தியாயங்கள் கொண்ட லிமிடெட் வெப் சீரிஸாக ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார். படத்துக்குத் தியேட்டர் மற்றும் ஓடிடியில் பெரிய வரவேற்புக் கிடைக்காத நிலையில் வெப் சீரிஸ் வடிவத்தில் வரவேற்புக் கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments