Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த படத்த மிஸ் பண்ணிடாதீங்க… இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பரிந்துரைத்த திரைப்படம்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (09:16 IST)
மம்மூட்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார்.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

மலையாளத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், தமிழில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார். அவரின் ட்வீட்டில் “ மிகவும் அழகான மற்றும் புத்துணர்ச்சியான படம், மம்மூட்டி சார் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லிஜோ ஜோஸின் இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்காமல் மிஸ் செய்து விடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments