கென் கருணாஸ் இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!

vinoth
வெள்ளி, 17 அக்டோபர் 2025 (12:02 IST)
நடிகர் கருணாஸின் மகனான கென்-ஐ தன்னுடைய அசுரன் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தி பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும் மீண்டும் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

மேலும் கென் கருணாஸ் வெற்றிமாறனோடு அதிக நேரம் செலவிட்டு அவருக்கு ஒரு உதவி இயக்குனர் போல பணியாற்றி வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது கென் ஒரு படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். இந்த படத்தைக் கருணாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. அதில் வெற்றிமாறன், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீதேவி, அனிஷ்மா, மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முழுக்க முழுக்க பள்ளியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு ‘காதலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் மோஷன் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல இந்த படம் பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை மோஷன் போஸ்டர் காட்டியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paarvathaa Entertainment (@paarvathaaent)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments