Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சலார் படம் கேஜிஎஃப் யூனிவர்ஸில் இடம்பெறுமா?... இயக்குனர் பிரசாந்த் நீல் பதில்!

சலார் படம் கேஜிஎஃப் யூனிவர்ஸில் இடம்பெறுமா?... இயக்குனர் பிரசாந்த் நீல் பதில்!
, வியாழன், 30 நவம்பர் 2023 (07:46 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சலார் முதல் பாகத்தின் டிரைலர் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தின் யூனிவர்ஸில் இடம்பெறும் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது பற்றி பதிலளித்துள்ள பிரசாந்த் நீல் “சலார் படத்துக்கு கே ஜி எஃப் படத்தோடு எந்த சம்மந்தமும் இல்லை. இரண்டு படங்களின் எமோஷனும் வேறு வேறானது.” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2025 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா கமல் & ஹெச்.வினோத் திரைப்படம்?