Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் –ரண்வீர் சிங் படத்தின் கதாநாயகி இவர்தான்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:30 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளாராம்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் இதற்கிடையில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் ரண்வீர் சிங்கை வைத்து ஒரு படத்தையும் இயக்க உள்ளாராம். இந்த இரு படங்களையும் அவர் ஒரே நேரத்தில் மாறி மாறி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷங்கர் எப்போதும் ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். நாயக் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கும் இரண்டாவது நேரடி இந்திப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments