சினி ஸ்டார்களின் சம்பளத்தில் 30% குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பல உதவிகளை செய்துவருகிறது. மாநில அரசுகளுக்கும் கை கொடுத்துவருகிறது. இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.
ஆனால், தமிழ் ஹீரோக்கள் பலர் உதவ முன்வராததாலும், அதே சமயத்தில் தமிழ் திரையுலகினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 30% குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.