Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஜெயபாரதி மரணம்.. திரைக்கலைஞர்கள் அஞ்சலி!

vinoth
சனி, 7 டிசம்பர் 2024 (09:06 IST)
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான ஜெயபாரதி உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர் இயக்கிய குடிசை திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட க்ரவுட் பண்டிங் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளராக இருந்து காட்டமான விமர்சனங்களை எழுதிவந்த் ஜெயபாரதி, பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தும் செல்லாமல் இயக்குனர் ஆனார். குடிசை படத்துக்குப் பிறகு அவர் ‘ஊமை ஜனங்கள்', ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு', ‘உச்சி வெயில்', ‘நண்பா நண்பா', ‘குருஷேத்திரம்', ‘புத்திரன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரின் படங்கள் பெரியளவில் வணிக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றன. ஆவடியில் உள்ள அவரது உடலுக்குத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

5 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்!

சென்னையில் பிரம்மாண்ட செட்.. இன்று தொடங்கும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments