Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் படத்தில் டப்பிங் பணியை முடித்த நடிகை!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (16:04 IST)
கர்ணன் படத்தில் நடித்துள்ள நடிகை லட்சுமி பிரியா தன் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை லட்சுமி பிரியா படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் ‘ கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளேன். நான் எவ்வளவு பரவசமாக இருக்கிறேன் தெரியுமா? 1000 முறை கூட மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்வேன். இந்த அற்புதமான படைப்பில் என்னையும் இணைத்ததற்கு நன்றி மாரி செல்வராஜ்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments