Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருவருப்பாக காட்டியுள்ளனர்… சல்மான் கான் பாடலைக் கடும் விமர்சனம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:06 IST)
சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் வெளியான ராதே திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு கிஸி க பாய் கிஸி கி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். வெங்கடேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த  படத்தின் டீசர் வெளியானது. ஆக்‌ஷன் காட்சிகள் பரபரப்போடு வெளியாகியுள்ள இந்த டிரைலரில் வீரம் படத்துக்கு எந்தவொரு சம்மந்தமும் இல்லாதது போல இருந்தது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலாக எண்டம்மா என்ற பாடல் வெளியானது. இதில் சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் ராம்சரண் ஆகியோர் வேட்டி அணிந்து கோமாளி போல ஆடியிருந்தனர்.

இது சர்ச்சைகளை உருவாக்க இப்போது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் “இந்த பாடல் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது. மிகவும் அபத்தமாக உள்ளது. நமது கலாச்சார உடையான வேட்டி மிகவும் அருவருப்பாக காட்டப்ப்ட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments