Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''லியோ ''படம் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் பதிவு

''லியோ ''படம் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் பதிவு
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (21:15 IST)
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர்,  மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து இயக்கியுள்ள படம் லியோ.  

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, இதன் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம்  வரும்   அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விரைவில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த ஆடியோ ரிலீஸின் போது, நடிகர் விஜய்யின் பேச்சிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகி வரவேற்பை பெற்ற நிலையில், “அடுத்த வாரம் லியோ படத்தின் அப்டேட் வெளியாகும்” என இசையமைப்பாளர் அனிருத் கூறியிருந்தார்.

இந்த நிலையில், லியோ படத்தின் டிக்கெட்டுகள் இங்கிலாந்து நாட்டின் ஒரே நாளில் 10,000 க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரஜியின் ஜெயிலர் படம் போல், இப்படமும் சாதனை படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பேசியது போதும்... செயலில் இறங்குங்கள்''- புளூ சட்டை மாறன்