இங்கிலாந்து நாட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து நாட்டில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சரியாக சிக்னல் கிடைக்கவில்லை.
இதனால் பல விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதாகவும் இங்கிலாந்தில் இருந்து கிளம்ப வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல மணி நேரம் போராடி தொழில்நுட்பக் குழுவினர் கோளாறை சரி செய்ததாகவும் இதனை அடுத்து விமானங்களின் கால அட்டவணை மாற்றப்பட்டு தற்போது விமானங்கள் மீண்டும் சீராக ஓட தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பல மணி நேரங்கள் பயணிகள் பெரும் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.