Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவனின் எல் ஐ சி பட தலைப்பு மாற்றமா?

vinoth
வியாழன், 27 ஜூன் 2024 (10:49 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு எல் ஐ சி என தங்கள் நிறுவனப் பெயரை வைக்கக் கூடாது என லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதனால் இப்போது தலைப்பு மாற உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு எல் ஐ கே என்று மாற்றம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments