லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த்…!

vinoth
சனி, 1 நவம்பர் 2025 (13:59 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. அவர் இயக்கிய ஆனந்தம், ரன், சண்டக் கோழி, பையா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் மோசமான கேலிகளை எதிர்கொண்டது.

படம் பற்றி  லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

இந்நிலையில் லிங்குசாமி அடுத்து இளைஞர்களைக் கவரும் விதமாக ஒரு காதல் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்  ஹர்ஷவர்தன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக காந்தாரா புகழ் ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்! பின்னணி என்ன?

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments