Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ட்ரைட் ஆக்‌ஷன் படம்… குறியீடு எல்லாம் இல்ல – லோகேஷ் சொன்ன மாஸ்டர் ரகசியம்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (13:35 IST)
மாஸ்டர் திரைப்படம் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பியும் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படத்தை பற்றி பல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது ஹாலிவுட்டில் வெளியான பைட் கிளப் படத்தின் காப்பி போல தெரிகிறது என விமர்சனங்கள் எழுந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் ‘அப்படி எல்லாம் இல்லை. மாஸ்டர் ஸ்ட்ரைட் ஆக்‌ஷன் திரைப்படம். அதில் குறியீடு எல்லாம் இல்லை’ எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments