பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீரென டுவிட்டரில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெட்ரோ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் திடீரென டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், அடுத்தபட அறிவிப்பின்போது மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மட்டுமின்றி அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.