Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கருக்கு எதிராக மேல்முறையீடு செய்த லைகா!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது என லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் இந்தியன் 2 திரைப்படம் முடியும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்கத் தடை கேட்டு லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யபபட்டன. இதை எதிர்த்து இப்போது ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments