Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாமன்னன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (08:52 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன.

இப்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் சமீபத்தில் வெளியானது. படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாகதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம்.

சேலத்தில் நடந்து முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments