Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி சினிமா குறித்து சொன்ன கருத்து… மகேஷ் பாபு அளித்த விளக்கம்!

Webdunia
புதன், 11 மே 2022 (15:58 IST)
நடிகர் மகேஷ் பாபு இந்தி சினிமாவில் நடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் இந்தி சினிமாக்களில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு “நிறைய இந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு சினிமாவிலேயே எனக்கு நட்சத்திர அந்தஸ்தும், ரசிகர்களின் பேரன்பும் கிடைத்துள்ளது. அதைவிடுத்து இன்னொரு மொழியில் நடிப்பது பற்றி நினைப்பது கூட இல்லை. தெலுங்கிலேயே பெரிய படங்கள் பண்ணவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” எனக் கூறியுள்ளார். 

மகேஷ் பாபுவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு மகேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் எல்லா மொழி படங்களையும் நேசிக்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன். நான் இப்போது பணிபுரியும் இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுவதையே சௌகர்யமாக உணர்கிறேன் என்று கூறியிருந்தேன். அது வேறுவிதமாக பரவி விட்டது” எனக் கூறி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments