Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகிய பூஜா ஹெக்டே… ஒப்பந்தம் ஆன தனுஷ் பட நடிகை!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (12:23 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருந்த நடிகை பூஜா ஹெக்டே, படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதையில் ஏற்பட்ட மாற்றத்தாலும் அவர் விலகியதாக சொல்லப்படுகிறது.

இப்போது அவருக்கு பதிலாக வாத்தி பட நடிகை சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் மற்றொரு நடிகையாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் விலகினார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments