Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது? அடுத்த கட்ட பணிகளை தொடங்கிய மகிழ் திருமேனி!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (09:18 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மே 1 ஆம் தேதி விடா முயற்சி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொண்டது.

இந்நிலையில் திரைக்கதை வேலைகள் முடிந்த நிலையில் இப்போது படத்துக்கான லொக்கேஷன் தேடுதல் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு உள்ளிட்ட்ட பணிகளில் இயக்குனர் மகிழ் திருமேனி இறங்கியுள்ளாராம். இதனால் விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடிபொலியானு.. ட்ரெய்லரே தெறிக்குதே! தமிழிலும் எதிர்பார்ப்பை தரும் மோகன்லாலின் ‘தொடரும்’!

கிரவுட் பண்டிங் மூலமாக உருவாகியுள்ள ‘மனிதர்கள்’… அறிமுக இயக்குனர் ராம் இந்திராவின் வித்தியாச முயற்சி!

நான் கதைக்கேட்டெல்லாம் பாட்டு போடுவதில்லை… அனிருத் ஓபன் டாக்!

சந்தானம் இனிமேல் காமெடி வேடங்களில் நடிப்பார்… சிம்பு அளித்த உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments