Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மம்மூட்டிப் படத்துக்கு சிக்கல் – நீதிமன்றம் கெடு !

மம்மூட்டிப் படத்துக்கு சிக்கல் – நீதிமன்றம் கெடு !
, வியாழன், 31 ஜனவரி 2019 (16:44 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சுயசரிதைப் படமான யாத்ரா விற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரமாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆந்திர மக்களிடம் பெருவாரியான் ஆதரவைப் பெற்ற அவரின் வாழக்கை வரலாறு இப்போதுப் படமாகியுள்ளது. இதில் ராஜசேகர ரெட்டிக் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 8 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக அமைந்தது அவர் மேற்கொண்ட பாத யாத்திரை. அதனால் இந்த படத்திற்கு யாத்ரா எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீசாய் லட்சுமி பிக்சர்ஸ் என்ற படத்தாயரிப்பு நிறுவனம், யாத்ரா என்ற தலைப்பை 2015 ஆம் ஆண்டே தாங்கள் பதிவு செய்து வைத்திருந்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செயதது.
webdunia

இதனை ஏற்று விசாரித்த நீதிமன்றம் வரும் 6 ஆம் தேதிக்குள் யாத்ரா பட தயாரிப்பு நிறுவனமான 70 எம் எம் இண்டர்நேஷனல் இதற்குப் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. யாத்ரா படம் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலிஸாக உள்ள நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவால் இப்போது புது சிக்கல் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியால் மாபெரும் வெற்றி கண்ட பாடலாசிரியர்! ட்விட்டரில் பெருமிதம்!