Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசங்களுக்கு தாண்டி பசங்கள பத்தி தெரியும்.. ‘குட்நைட்’ படத்தை மணிகண்டனின் ‘லவ்வர்’ டீசர்..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (17:19 IST)
மணிகண்டன் நடித்த ‘குட்நைட்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்ற நிலையில் மணிகண்டன் நடித்த அடுத்த திரைப்படமான ‘லவ்வர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.  இந்த படம் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 
 
மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகிய இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வரும் நிலையில் திடீரென இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட அந்த பிரச்சனைக்கு என்ன காரணம்? பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் இணைந்தார்களா? என்பதை விறுவிறுப்பாக கூறி இருக்கும் திரைக்கதை தான் இந்த படம். 
 
மணிகண்டன் குட்நைட் போலவே இந்த படத்திலும் நடிப்பில் அசத்தியுள்ள நிலையில் கண்டிப்பாக இந்த படமும் அவருக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில், ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments