Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வரை நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் ‘அந்த’ ஆசை!

vinoth
புதன், 26 மார்ச் 2025 (15:03 IST)
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், நேற்று இரவு மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தந்தை பாரதிராஜாவை போலவே மனோஜும் இயக்குனர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் தான் நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்ததால் தன் மகனை ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரால் நடிகராக பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் தந்தையை வைத்தே ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார்.

ஆனால் மனோஜுக்கு, தன்னுடைய தந்தையின் ஹிட் படமான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து இயக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். ஆனால் கடைசி வரை அவரின் அந்த ஆசை கைகூடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்டப் புகைப்படம்!

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கிய விஜய் சேதுபதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் சர்தார் 2.. ஆனாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கவில்லையாம்!

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments