Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ் குந்த்ரா கைது வழக்கு… முன் ஜாமீன் கேட்ட மும்பை நடிகை

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (10:37 IST)
ராஜ் குந்த்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல நடிகைகளின் செல்போன் எண்களைப் போலிஸார் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.அந்த காவல் இன்றோடு முடியும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட காவல் நேற்றோடு முடிந்த நிலையில் அவரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. அதற்கு ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர் ‘அவர் என்ன தீவிரவாதியா? ஏன் அவரின் ஜாமீனை நிராகரிக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்ப அரசு வழக்கறிஞர் ‘ஏற்கனவே பல டிஜிட்டல் ஆதாரங்களை ராஜ் குந்த்ரா அழித்துள்ளார். வெளியில் விட்டால் மேலும் பல ஆதாரங்களை அழித்து விடுவார்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்குந்த்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஷேர்லின் சோப்ரா என்ற நடிகை அவருக்கு பல பெண்களை அறிமுகப்படுத்தி வைத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஷேர்லின் சோப்ரா மும்பை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க அது தள்ளுபடி செய்துள்ளது. ஷேர்லின் போல பல பெண்களின் தொடர்புகள் ராஜ் குந்த்ராவின் செல்போனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments