Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன்னன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ள யோசிக்கும் ரஜினி… காரணம் தனுஷா?

Webdunia
சனி, 20 மே 2023 (06:54 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மாமம்மன் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் கலந்துகொள்ள வைக்க உதயநிதி ஸ்டாலின் சார்பாக முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. உதயநிதியின் கடைசி படமாக மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி கமல்ஹாசன் நிகழ்வில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் தனுஷும் பங்கேற்பதால் ரஜினி கலந்துகொள்ள யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments