Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கிய மாமன்னன் படக்குழு!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:35 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன.

இப்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் சமீபத்தில் வெளியானது. படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாகதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம்.

இதையடுத்து தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சேலத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இங்கு 20 நாட்களுக்கு மேல் நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் நிறைவுறும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments