சென்னையில் வங்கி அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து இயக்குனர் மோகன்ஜீ எச்சரித்துள்ளார்.
சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையால் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இயக்குனர் மோகன்ஜீ இதுகுறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஆன்லைன் விளையாட்டு நீங்கள் நினைப்பது போல மனிதர்களுக்குள் மட்டும் விளையாடும் விளையாட்டு அல்ல.. Bot எனப்படும் அவர்களே program செய்து வெற்றி மட்டுமே பெறும் தன்மை கொண்ட மனிதர்கள் போல வெவ்வேறு பெயர்களால் வடிவமைக்கப்பட்ட போலிகள். நீங்கள் மனிதர்களுடன் விளையாடுவதாக நினைத்து பணத்தை இழந்து பின் வாழ்வை இழக்காதீர்கள்.. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடுவது ஒரு மாய உலகம்.. விட்டவர்கள் தான் உண்டு.. வென்றவர்களை பார்ப்பது அரிது.” என்று தெரிவித்துள்ளார்.