மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் அதற்கு முன்பாக மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த எம்பூரான் திரைப்படம் (லூசிபர் 2) தற்போது தொடங்கப்பட உள்ளது.
எம்பூரான் திரைப்படத்தை ஆஷிர்வாத் சினிமாஸோடு இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அக்டோபர் 5 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்க உள்ளது. படத்தின் தொடக்க விழா சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.