மோகன்லால் வைத்துள்ள யானை தந்தம் லைசென்ஸ் செல்லாது! - நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

Prasanth K
வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:29 IST)

மோகன்லால் யானை தந்தம் வைத்திருப்பதற்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன்லால். கடந்த 2011ம் ஆண்டில் மோகன்லால் தனது வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் பெறாமல் யானை தந்தம் வைத்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கேரள அரசு யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை வழங்கியது.

 

இந்த வழக்கு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், மோகன்லால் ஏற்கனவே யானை தந்தம் வைத்திருக்க லைசென்ஸ் பெறவில்லை, சோதனைக்கு பிறகே அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் தொடர்பாக கேரள அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

 

இதனால் வரும் காலத்தில் வனத்துறை சார்பில் யானை தந்தம் முறைகேடாக வைத்திருந்த வழக்கு தொடர்பாக மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.’

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments