பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.
140 கோடி இந்தியர்களின் பார்வையும் இப்போது ஆஸ்கர் விழா மேடை நோக்கி இருந்தது. பரிந்துரைப் பட்டியலில் உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருதை வென்று அசத்துமா? என்ற நம்பிக்கை இப்போது வீணாகவில்லை.
ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் விருதை வென்றுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் மரகதமணி “ஆர் ஆர் ஆர் படக்குழுவையும், இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்து பேசினார்” மேலும் இது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை என்றும் பேசினார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் மேடையில் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.