Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (07:15 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
 
கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்
 
கடந்த 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புச் சக்கரவர்த்தி, நடிகர் திலகம் உள்பட பல பட்டங்களை ரசிகர்கள் மூலம் பெற்ற சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பிற்கு ஈடு இணை யாரும் கிடையாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது 
 
கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்கள் அவருடன் நடிப்பதை பெருமையாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜிகணேசனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்மபூஷன் ஆகிய விருதுகள் கிடைத்தது என்பதும் அதேபோல் சேவை விருது கலைமாமணி விருது உள்பட பல விருதுகள் அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிவாஜிகணேசன் அவர்களின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு சினிமா உள்ளவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments