Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி வசூல்… தசரா இயக்குனருக்கு விலை உயர்ந்த பரிசைக் கொடுத்த தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (13:50 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுக்க சுமார் 38 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது 6 நாளில் 100 கோடி ரூபாய் வசூலில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதையடுத்து படத்தின் சக்ஸஸ் நிகழ்வில் படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கு விலையுயர்ந்த பி எம் டபுள் யூ காரை தயாரிப்பாளர் பரிசாக அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments