Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நடிகர் நாசர்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (19:00 IST)
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையுலகினர் சூர்யாவுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியாக குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவற்றின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை. சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது.
 
நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன. தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.
 
இந்தச் சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று. மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச் சேர்ப்போம், புதியதோர் உலகம் செய்வோம்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“அவர் என் நண்பர் மட்டுமல்ல… அவர் என் ரத்தம்..” சின்மயியின் கணவர் குறித்து நெகிழ்ந்த சமந்தா!

‘ரெட்ரோ’ பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா…!

ராமாயணம் படத்தில் எனக்குப் பதில் சாய் பல்லவியா?... கேஜிஎஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

‘எத்தனையாவது காதலர் என்று கேட்கிறார்கள்… அவர்களுக்கு அது எண்ணிக்கை’ –ஸ்ருதிஹாசன் தெளிவான பதில்!

PAN இந்தியா சினிமா என்ற பாதையை வகுத்துக் கொடுத்த பாகுபலி… 10 ஆண்டுகளுக்குப் பின் ரி ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments