Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்காக போராடும் தாய்… கவனம் ஈர்த்த நயன்தாராவின் O2 டிரைலர்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (08:45 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் O2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்த டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள O2 என்ற திரைப்படம் ஓடும் இந்த படதின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது O2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. மண்ணுக்குள் அடியில் புதைந்துவிடும் பேருந்தில் அனைவரும் சுவாசிக்க முடியாமல் தடுமாற, நயன்தாராவின் பையன் வைத்திருக்கும் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை கைப்பற்ற அனைவரும் முயல, அவர்களிடம் இருந்து தன் மகனை நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சொல்லும் விதமாக டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பார்க்கும் ஆவலை இந்த டிரைலர் உருவாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments