Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புடிச்சத பண்ணுனா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டாராகலாம்''- 'அன்னப்பூரணி' பட டிரெயிலர்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (20:56 IST)
நயன்தாரா 75 வது படமான  'அன்னப்பூரணி' படத்தின்  டிரெயிலர் இன்று  வெளியாகியுள்ளது.
 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.  இவர் நடித்துள்ள படம் அனனப்பூரணி. இந்த படத்தில் ஹீரோவாக  ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.
 
சமீபத்தில் ஜீ ஸ்டுடியோ நிறுவனம்,  நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னப்பூரணி படம்  வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்தது.
 
இதையடுத்து சமீபத்தில்  நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னப்பூரணி படத்தின் முதல் சிங்கிலை’ உலகை வெல்லப் போகிறாள்’ என்ற பாடலை  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம்  என்ற பாடலை ரிலீஸ் செய்தது.
 
இந்த நிலையில், அன்னப்பூரணி படத்தின் 2 வது சிங்கில் ஃலைப் ஈஸ் ஆன் ( Life Is on) சமீபத்தில் வெளியானது.
 
இந்த நிலையில், இன்று அன்னப்பூரணி பட டிரைலர் ரிலீஸாகியுள்ளது. இதில், நயன்தாரா, சத்யராஜ், ஜெய் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஹோம்ளி கேர்ளாக நடித்துள்ள நயன்தாராவுக்கு இந்த உலகின் சிறந்த செஃப் ஆக ஆசைப்படுகிறார். இதற்கு, நயன்தாராவின் அப்பா, அம்மா இருவரும் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பை மீறி வளர்ந்த சூழலை தாண்டி, போட்டிகளை சமாளித்து அவர்  நினைத்தபடி போட்டியில் வென்றாரா என்பதுதான் கதை! தமனின் இசை, உள்ளிட்ட அனைத்தும் அற்புதமான அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இந்த டிரைலர் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments