Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ராம்- நிவின் பாலி இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?... வெளியான தகவல்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (16:28 IST)
இயக்குனர் ராம் மற்றும் நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகிய இருவரின் பிறந்தநாளின் போது படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவற்றை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு ‘ஏழு மலை ஏழு கடல் தாண்டி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments