Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (22:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் போன்று பிக்பாஸ் 2 இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்து வரும் நிலையில் முதல் வாரம் முழுவதும் கிட்டத்தட்ட வெங்காயம் பிரச்சனை ஆக்கிரமித்து உள்ளது. இன்று கமல் வரும் நாளிலாவது இந்த வெங்காயம் பிரச்சனை முடியும் என்று பார்த்தால் இன்றும் அது தொடர்ந்து கொண்டே இருப்பதால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.
 
வெங்காயம் பிரச்சனை குறித்து கமல் போட்டியாளர்கள் எல்லோரிடமும் விசாரணை செய்து கொண்டிருக்கின்றார். நித்யாவை கிட்டத்தட்ட எல்லோருமே இந்த வெங்காய பிரச்சனையில் குறை கூறுகின்றனர். குறிப்பாக பாலாஜி, தான் கூறியதால்தான் நித்யா வெங்காயத்தை போடவில்லை என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.
 
நித்யா இந்த கருத்தை மறுத்து கூறி விளக்கமளிக்க மகத், பாலாஜியின் கருத்தை ஆமோதிக்க என இன்றும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெங்காயம் பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கின்றது. சீக்கிரம் இந்த பிரச்சனையை முடித்துவிட்டு அடுத்த பிரச்சனையை ஆரம்பியுங்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments