Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸின் ‘J பேபி’… அன்னையர் தினத்தில் முதல் சிங்கிள்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (15:00 IST)
பா ரஞ்சித் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ், ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடிப்பில் ஜெ பேபி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு J பேபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டாக மே 8 ஆம் தேதி அன்னையர் தினத்தில் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments