Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பார்த்திபன்?

Advertiesment
பார்த்திபன்

vinoth

, செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (11:17 IST)
தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதாவது வித்தியாசமான முயற்சிகளை செய்துகொண்டே இருப்பவர் இயக்குனர், நடிகர் பார்த்திபன். அந்த வகையில் அவர் இயக்கிய ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

தொடர்ந்து ‘இட்லி கடை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் அறிவியல் சம்மந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். தென்னிந்தியாவின் சிறந்த அறிவியல் படைப்புகளைக் கண்டறியும் ‘pitch it on- நீங்களும் ஆகலாம் கலாம்” என்ற நிகழ்ச்சியைதான் தொகுத்து வழங்குகிறார்.

இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “அப்துல் கலாம் அவர்களுக்கும் எனக்கும் உணர்வுபூர்வமான உறவு. இப்போது விவேக்கை நான் அதிகமாக மிஸ் செய்கிறேன். அவர் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை அவரைதான் தொகுத்து வழங்க சொல்லியிருப்பேன். அறிவியல் உலகில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களூக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலிக்க இதுதான் காரணம்… சிவகார்த்திகேயன் கருத்து!