Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:49 IST)
திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்,   நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து   மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார்  நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில், திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும்,    நேரடியாக அழைத்து விசாரிக்க  அவருக்கு 41 ஏ எனப்படும் நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

எல்லாமே பொய்.. தனுஷ் - அஜித் சந்திப்பு நடக்கவே இல்லை.. அடுத்த பட இயக்குனர் இவர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments