Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம்’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (18:26 IST)
உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படப்பிடிப்பிற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ள தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது
 
உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காரைக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு சில முக்கிய காட்சிகள் சென்னையில் உள்ள எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு அனுமதி கேட்டு காவல் துறைக்கு கடிதம் எழுதினார் 
 
ஆனால் அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பி உள்ள காவல்துறை சென்னை போலீஸ் அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் எந்த படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments