Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் 2 வின்னர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Webdunia
புதன், 10 மே 2023 (16:28 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, ரூ 500 கோடி வசூலித்தது.
 
இப்படம்  தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம்  ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடியது. ஆனால் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதால் வசூலில் பின்தங்கிவிட்டது. 
 
சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இப்படத்தைப் புகழ்ந்து, பாராட்டி வரும் நிலையில், இப்படம்  உலகம் முழுவதும் ரூ.300 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக  தெரிவித்துள்ளது. 
 
இனி வரும் நாட்களில் முதல்  பாகத்தின் ரூ. 500 இலக்கை எட்டுவது மிகவும் கடினம் தான். இப்படியிருக்கும் நேரத்தில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் 2 வின்னர் என அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

எல்லாமே பொய்.. தனுஷ் - அஜித் சந்திப்பு நடக்கவே இல்லை.. அடுத்த பட இயக்குனர் இவர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments