Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிறான் ஆதித்த கரிகாலன்..! – பொன்னியின் செல்வர் போஸ்டர் வைரல்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (12:30 IST)
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்த கரிகாலன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அரச காலத்து படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது லைகா ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ராஜராஜசோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். குதிரை மீது ஆதித்த கரிகாலன் அமர்ந்து செல்வதாக உள்ள போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments