Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டிலை மறுத்த இயக்குநர்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (09:56 IST)
சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘சீமத்துரை’ என்று வைக்கப்பட்டுள்ள டைட்டிலை, இயக்குநர் பொன்ராம் மறுத்துள்ளார்.



பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். காமெடியனாக சூரி நடிக்கிறார். தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ‘சீமத்துரை’ என்று தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால், இந்தத் தகவலை பொன்ராம் மறுத்துள்ளார். இன்னும் தலைப்பு முடிவாகவில்லை என்றும், முடிவானபின் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments