Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்க வீட்டில் சிரித்தபடியே செல்பி எடுத்த பிரபல மலையாள நடிகர்

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (14:15 IST)
நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான சுரேஷ் கோபி, துக்க வீட்டில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ள சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ கல்லூரியில் பிளக்ஸ் வைப்பது குறித்த தகராறில் எதிரணி மாணவர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அபிமன்யூ ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. 
 
இந்நிலையில் நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான சுரேஷ் கோபி, மாணவனின் வீட்டிற்கு சென்று அபிமன்யூ குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
துக்கம் விசாரித்து விட்டு வெளியே வந்த சுரேஷ்கோபி, அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். துக்க நிகழ்ச்சியில் சுரேஷ்கோபி இப்படி சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த நிகழ்வு கேரளாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments