Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதிபுரூஸ் படத்தை விமர்சனம் செய்த நபர் மீது பிரபாஸ் ரசிகர்கள் தாக்குதல்..வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (14:53 IST)
ஆதிபுரூஸ் படம்  இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை விமர்சனம் செய்த நபர் மீது பிரபாஸ் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக இன்று இப்படம்  வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பில்லை என்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆதிபுரூஸ் பற்றி திரையரங்கிற்கு வெளியில்  நின்று ரசிகர்கள் ஒருவர் இப்படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தபோது, பிரபாஸ் ரசிகர்கள் ஆத்திரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments